காணத்தக்க இடங்கள்

ஜம்புகேஸ்வர் திருக்கோவில், திருவானைக்காவல்

ஜம்புகேஸ்வர் திருக்கோவில், திருவானைக்காவல்

சிவ தலமான ஜம்புலிங்கேஸ்வர் – அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் திருவானைக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. நீரைக் குறிக்கும் பஞ்சபூத ஸ்தலமான இக்கோவில் அப்பு ஸ்தலம் என்றும் இங்குள்ள சிவலிங்கம் அப்புலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு கருவறையில் உள்ள சிவலிங்கம் உள்ளே பாயும் சிறிய ஊற்றில் மூழ்கி இருக்கும். முற்காலத்தில் யானை ஒன்று புனித ஜம்பு மரத்தின் கீழே நின்று சிவபெருமானை வணங்கியதால் இந்தக் கடவுள் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். திருவானைக்காவல் சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிக்கும் திருவரங்கத்திற்கும் நடுவே உள்ளது. இந்தக் கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது


மாரியம்மன் கோவில், சமயபுரம்

மாரியம்மன் கோவில், சமயபுரம்

திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சமயபுரம் அங்குள்ள மாரியம்மன் கோவில் காரணமாகப் புகழ் பெற்றது ஆகும். தற்போதுள்ள கோவில் விஜயராய சர்க்கரவர்த்தியால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் இந்தக் கோவிலில் தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.சமயபுரம் பண்டைய காலத்தில் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ஊர் முன்னாளில் கண்ணனூர், கண்ணபுரம், விக்கிரமபுரம் மற்றும் மாகாளிபுரம் என அழைக்கப்பெற்றது. இங்கு மார்ச் மாதத்தில் பூச்சொறிதலும் ஏப்ரல் மாதத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறும்