Close

மலைக்கோட்டை கோவில்

திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோவிலில் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த மலை உச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் கோவில், காவேரி ஆறு, கொள்ளிடம் ஆறு, திருவானைக்காவல் கோவில் ஆகியவை நன்கு புலப்படும்.

புகைப்பட தொகுப்பு

  • மலைக்கோட்டை கோயில் -காவிரி நதி
  • மலைக்கோட்டை கோயில்-கிழக்கு பகுதி
  • மலைக்கோட்டை கோயில்தெற்கு பகுதி

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு

சாலை வழியாக

திருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்தில் இருந்து மலைக்கோட்டை கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன