Close

திருவரங்கம் கோவில்

விஷ்ணுவின் எட்டு ஸ்வயம் வியாகத ஷேத்திரங்களுள் முதன்மை ஆனது ஸ்ரீரங்கம். 156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். இந்தக் கோவில் திருவரங்க திருப்பதி, பெரியகோவில், பூலோக வைகுண்டம் மற்றும் போக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றி அரண் போன்ற சுற்றுச் சுவர்கள் உள்ளன. இங்கு கம்பீரமான பெரிய 21 கோபுரங்கள் உள்ளன. இது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போல உள்ள நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர்கள், சேராகள், பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆட்சியில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தது

புகைப்பட தொகுப்பு

  • திருவரங்கம்-ராஜகோபுரம்
  • Srirangam-Gopurams
  • ஆயிரம் கால் மண்டபம்

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு

சாலை வழியாக

திருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்தில் இருந்து திருவரங்கத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன