தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026

Filter by:
Training Session on Postal Ballots

வீட்டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள்-வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.04.2026) […]

SVEEP Activities

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு – 31.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு – 31.03.2026 (PDF-171KB)

Inspection by the Election General Observer.

தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வு – 31.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வு – 31.03.2026 (PDF-153KB)

SVEEP Activities

100% வாக்குப்பதிவு இலக்கு- வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம் – 30.03.2026.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (SVEEP) ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் ஆலோசனைகளின் படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (30.03.2026) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம். (PDF-201KB)

SVEEP Activities

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம் – 28.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (SVEEP) ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் ஆலோசனைகளின் படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (28.03.2026) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம். (PDF-188KB)

படங்கள் ஏதும்  இல்லை

9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி நிறைவு – மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி நடைபெற்றது – மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-188KB)

படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் அறிவிப்பு- வேட்புமனுத் தாக்கல் செய்திகள்.

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில், வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை, 06.04.2026 (திங்கட்கிழமை) அன்று அல்லது அதற்கு முன்னதாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். (PDF-184KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்டத் தேர்தல் அலுவலர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார் – 26.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026

மாவட்டத் தேர்தல் அலுவலர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார் – 26.03.2026 (PDF-164KB)

The DEO Inspection.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-183KB)

SVEEP Activities

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். (PDF-160KB)