வீரமலைபாளையம், துப்பாக்கி சூடு பயிற்சி – செய்திகள்
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2026
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சூடு இடத்தில், HQ AFSOD Unit, 13th Battalion, The Parachute Regiment (Special Forces) படையினரால் 09.01.2026 முதல் 13.01.2026 வரை துப்பாக்கி சூடு பயிற்சி நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் மாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். இக்காலகட்டத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி நடைபெறுவதால், மேற்கண்ட பயிற்சி நடைபெறும் பகுதிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், பொதுமக்கள் நடமாட்டமும் அனுமதிக்கப்படாது.
மேலும், குறிப்பிடப்பட்ட பயிற்சி பகுதியில் யாரும் நுழையக் கூடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
(PDF-76KB)