மாவட்ட ஆட்சித் தலைவர் – கிளஸ்டர் வாக்குச்சாவடி ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 18/02/2026
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 139 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மற்றும் 141 திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஒரே அமைவிடத்தில் அதிக வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 14 மையங்களில் உள்ள வாக்குச்சாவடி மைய கட்டிடங்களின் உறுதித்தன்மை, அடிப்படை வசதிகள், வாக்காளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.02.2026) ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.(PDF-159KB)