தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் வினாடி வினா செய்திகள்
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா நிகழ்ச்சியில், ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், திருக்குறள் மாநாடு, திருக்குறள் நாடகம், திருக்குறள் இசை நிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வகையில், திருக்குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக 21.01.2026 அன்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கும் திருக்குறள் மாநாடு மற்றும் குறள் வினாடி–வினா போட்டி நடைபெற உள்ளது.
(PDF- 78KB)