சமூக நலத்துறை சார்பில்-சிறந்த திருநங்கை விருது
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2026
பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், தங்களது சொந்த முயற்சியால் முன்னேறி, கல்வி பெற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த திருநங்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், மற்ற திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் சிறந்த திருநங்கை விருது வழங்கப்படும்.
மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பங்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதி : 18.02.2026.
மேலும் விவரங்களுக்கு 0431-2413796 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
(PDF-105KB)