Close

தாட்கோ

தாட்கோ

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்

பொது – ஆதிதிராவிடர்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்துடன் 1974ஆம் ஆண்டு தொழில் நிறுவனச்சட்டம் -1956ன் கீழ: தாட்கோ பதிவு செய்யப்பட்டது.

திட்டங்கள் ( https://newscheme.tahdco.com)

திட்டங்கள்
வ.எண் திட்டத்தின் பெயர் தகுதி நிதியுதவி / மானியம் முக்கிய நிபந்தனைகள்
1. வெற்றி தொழில் முனைவோர் திட்டம் ஆதிதிராவிடர் / பழங்குடியினர்; வயது 18–55; ஆண்டு குடும்ப வருமானம் ₹3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டச் செலவில் 35% அல்லது ₹3.50 இலட்சம், இதில் எது குறைவோ அது மூலதன மானியமாக வழங்கப்படும். மேலும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
2. ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டம் (Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojna – PM-AJAY) ஆதிதிராவிடர்; வயது 18–55; ஆண்டு குடும்ப வருமானம் ₹3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டச் செலவில் 50% அல்லது ₹50,000, இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துகள் பயனாளியின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
3. பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் ஆதிதிராவிடர் பெண்கள்; 12 உறுப்பினர்களைக் கொண்ட குழு; ஒவ்வொரு உறுப்பினரின் வயது 18–55; ஒவ்வொரு உறுப்பினரின் ஆண்டு குடும்ப வருமானம் ₹3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டச் செலவில் 50% அல்லது ₹6.00 இலட்சம், இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். குழு மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
4. மண்ணின் மகள் திட்டம் ஆதிதிராவிடர் / பழங்குடியினர்; வயது 18–55; ஆண்டு குடும்ப வருமானம் ₹3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில், நிலத்தின் விலையில் 50% அல்லது ₹5.00 இலட்சம், இதில் எது குறைவோ அது வழங்கப்படும். விற்பனையாளர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாதவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 2.5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலம். முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தில் முழு விலக்கு வழங்கப்படும். நிலத்தை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது.
5. துரித மின் இணைப்பு திட்டம் பழங்குடியினர்; ஆண்டு குடும்ப வருமானம் ₹3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குதிரைத்திறன் (HP) அடிப்படையில் 90% அரசாங்க மானியம் மற்றும் 10% பயனாளி பங்களிப்பு. நிலம் விண்ணப்பதாரரின் சொந்தமாக இருக்க வேண்டும் மற்றும் கிணறு / ஆழ்துளைக் கிணறு இருக்க வேண்டும். மின் இணைப்பிற்காக TNPDCL-க்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
6. கல்விக் கடன் திட்டம் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / தூய்மைத் தொழிலாளர்களின் சார்ந்தோர். வருமான வரம்பு: ஆதிதிராவிடர் ₹5 இலட்சம்; பழங்குடியினர் ₹3 இலட்சம்; தூய்மைத் தொழிலாளர்களின் சார்ந்தோர் ₹4.50 இலட்சம். ஆதிதிராவிடர்: ₹40 இலட்சம் வரை; பழங்குடியினர்: ₹10 இலட்சம் வரை; தூய்மைத் தொழிலாளர்களின் சார்ந்தோர்: இந்தியாவில் ₹10 இலட்சம் வரை மற்றும் வெளிநாட்டில் ₹20 இலட்சம் வரை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படும். நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி வட்டி மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் அமையும்.
7. தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் தகுதியுடைய தூய்மைப் பணியாளர்கள்; நிர்ணயிக்கப்பட்ட அதிகாரி மற்றும் மாவட்ட மேலாளர், TAHDCO மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். விபத்து, இயற்கை மரணம், இறுதிச்சடங்கு, கல்வி உதவி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி செலவு ஈடு மற்றும் முதியோர் ஓய்வூதிய உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். சரிபார்ப்பிற்குப் பிறகு தகுதியுடைய பணியாளர்களுக்கு உறுப்பினர் அட்டை / ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
துரித மின் இணைப்பு திட்டம் – மானிய விபரம்
வ.எண் குதிரைத்திறன் 90% மானியம் 10% பயனாளி பங்குத்தொகை மொத்தம்
1. 5 HP ₹2,25,000/- ₹25,000/- ₹2,50,000/-
2. 7.5 HP ₹2,47,500/- ₹27,500/- ₹2,50,000/-
3. 10 HP ₹2,70,000/- ₹30,000/- ₹3,00,000/-
4. 15 HP ₹3,60,000/- ₹40,000/- ₹4,00,000/-

கல்விக் கடன் திட்டம்

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) (https://tel.tahdco.com)மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள் (சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை , குடும்ப அட்டை, திட்ட அறிக்கை, விலைப்புள்ளி)

கல்விக் கடன் திட்டம்
வ.எண் வகை விவரங்கள் வட்டி விகிதம்
1. ஆதிதிராவிடர் மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயில அதிகபட்சம் ₹40.00 லட்சம் வரை கல்விக் கடன். 6.5%
2. பழங்குடியினர் மாணவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயில அதிகபட்சம் ₹10.00 லட்சம் வரை கல்விக் கடன். 6%
3. துப்புரவுத் தொழிலாளர்களின் சார்ந்தவர்கள் இந்தியாவில் ₹10.00 லட்சம் வரை மற்றும் வெளிநாடுகளில் ₹20.00 லட்சம் வரை. இந்தியா: 6% வெளிநாடு: 7%
4. பெண் மாணவர்கள் – துப்புரவுத் தொழிலாளர்களின் சார்ந்தவர்கள் இந்தியா / வெளிநாடுகளில் கல்வி பயில. இந்தியா: 6% வெளிநாடு: 7%
5. திருப்பிச் செலுத்துதல் கடன் ஒப்புதல் பெற்ற மாதத்திலிருந்து மாதந்தோறும் வட்டி செலுத்தப்பட வேண்டும். படிப்பு முடிந்த பின்னர், அசல் தொகை மற்றும் வட்டி 5

தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம்

விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக) (https://tncwwb.com/)

தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம்
வ.எண் நலத்திட்டத்தின் பெயர் வழங்கப்படும் தொகை
1. விபத்து காப்பீட்டுத் திட்டம்
1(a)விபத்து காரணமாக மரணம் (காப்பீடு)
1(b) மாற்றுத்திறன் (கை, கால், கண்கள்)

₹ 10,00,000
₹ 1,00,000 to 5,00,000
2. இயற்கை மரண உதவி ₹20,000
3. ஈமச்சடங்கு உதவித் தொகை ₹5,000
4. கல்வி உதவித்தொகை
4(a)10ஆம் வகுப்பு வரை (பெண்களுக்கு மட்டும்)
4(b)10ஆம் வகுப்பில் தேர்ச்சி (இருபாலருக்கும்)
4(c)11ஆம் வகுப்பு வரும் (பெண்களுக்கு மட்டும்)
4(d)12ஆம் வகுப்பு வரும் (பெண்களுக்கு மட்டும்)
4(e)12ஆம் வகுப்பில் தேர்ச்சி (இருபாலருக்கும்)
4(f)முறையான பட்டப்படிப்பு
பகல் நேர மாணவர்கள்
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள்
4(g)முறையான முதுநிலைப் பட்டப்படிப்பு
பகல் நேர மாணவர்கள்
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள்
4(h)தொழில்நுட்பக் கல்வியில் பட்டப்படிப்பு
பகல் நேர மாணவர்கள்
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள்
4(i)தொழில்நுட்பக் கல்வியில் முதுநிலைப் பட்டப்படிப்பு பகல் நேர மாணவர்கள்
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள்
4(j)ITI அல்லது பாலிடெக்னிக்
பகல் நேர மாணவர்கள்
விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள்

₹1,000
₹1,000
₹1,000
₹1,500
₹1,500

₹1,500
₹1,750

₹4,000
₹5,000

₹4,000
₹6,000

₹6,000
₹8,000

₹1,000
₹1,200
5. திருமண உதவித்தொகை
ஆண்
பெண்

₹3,000
₹5,000
6. மகப்பேறு உதவித்தொகை
கருச்சிதைவு/கருகலைப்பு
₹6,000
₹3,000
7. கண்கண்ணாடி உதவி ₹500
8. முதியோர் ஓய்வூதியம் ₹1000
தொடர்பு விவரங்கள்
தொடர்பு அலுவலர் அலுவலகம் தலைமை அலுவலகம் தொலைபேசி இணையதளம்
மாவட்ட மேலாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, திருச்சிராப்பள்ளி. தொலைபேசி.0431-2463969

dmtahdcotry@gmail.com

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) எண். 31, செனடாப் சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 +91 44 2431 0221 https://tahdco.com/